கோவை, செப்.13- கோவையில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதி களை பின்பற்றி ஏராளமான மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுத நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவை மாவட்டத்தில், ஞாயிறன்று 16 மையங்களில் நடைபெறும் நீட் தேர்வில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். மதியம் 2 மணிக்கு துவங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட் டது. மேலும், அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டா யமாக முக கவசம் அணியவும், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், வழக்கமான நீட் தேர்வு விதிமுறைகளும் நடைமுறைத் தப்பட்டது. கோவையில், உள்ள நீட் தேர்வு மையங்கள் முன் காலை 9 மணி முதலே மாணவ, மாணவியர் வரிசை யில் காத்திருந்தனர்.