tamilnadu

கோவை: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, செப்.19-  அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டம் சிங்காநல்லூர் கிளை சார்பில் ஊட்டச் சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புலியகுளம் பகுதியில் நடை பெற்றது.  

பொது மக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் எடுத்து கொள்ள வேண்டிய சத்து மிகுந்த உணவு பொருட்கள் என்னென்ன என்பதை விளக்கும் வகையில் “அனைவருக் கும் ஊட்டச்சத்து அதுவே நம் வாழ்வின் சொத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடனம் நடைபெற்றது. இதில்  கலந்து கொண்ட குழந்தைகள் கேரட், வெண்டை போன்ற காய்கறி வகைகள், முருங்கை, பசலை போன்ற கீரை வகை களை மாலையாக அணிந்து விழிப்புணர்வு நடனமா டினர்.

இதே போல் கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, தேன் மிட்டாய், தேங்காய் பருப்பி போன்ற சத்தான தின்பண் டங்களை வாங்கி உட்கொள்ள வலியுறுத்தும் வகையில் பெட்டி கடை மாதிரி தள்ளுவண்டி ஒன்றை வடிவமைத்தி ருந்தனர். அதில் உடலுக்கு நன்மை பயக்கும் தின்பண்டங் கள், புத்தகங்கள் தொங்க விடப்பட்டு இருந்தது.  இந்த விழிப் புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.