tamilnadu

img

பி.எஸ்.கிருஷ்ணன்- சமூக நீதிக்கான அறப்போர்: நூல் வெளியீட்டு விழா

விடுதலைப் போராட்ட வீரர் ஆர்.நல்லக்கண்ணு வெளியிட்டார்

கோவை, ஜன.31–  இந்திய அரசின் முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணனின் சமூக நீதிச் சகாப்தத்தைப் பேசும் “சமூக நீதிக்கான அறப்போர்“ என்ற நூலை வெள்ளியன்று கோ வையில் விடுதலை போராட்ட வீரர் ஆர்.நல்லக்கண்ணு வெளி யிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம் பாட்டிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இந்திய அரசின் முன் னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ் ணனின், 70 ஆண்டுகால சமூக நீதிச் சகாப்தத்தைப் பேசும் தொகுப்பாய் வெளியாகியுள்ள “சமூக நீதிக்கான அறப்போர்“ என்கிற நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று கோவை பீள மேடு நவஇந்தியா பகுதியில் உள்ள ஓட்டல் அக்சயத்தில் நடை பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் தலைவர்களில் ஒருவரான மு.ஆனந்தனின் மொழிபெயர்ப் பில் உருவான இந்நூலை விடு தலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவருமான ஆர்.நல்லக்கண்ணு வெளியிட்டு சிறப் புரையாற்றினார். இதைத்தொடர்ந்து பி.எஸ்.கிருஷ்ணனின் அர்ப்பணிப்பு மிக்க  உழைப்பு, இன்றைய சமூக சூழல் ஆகியவைகள் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செய லாளர் கே.சாமூவேல்ராஜ், கவி ஞர் சுகிர்தராணி ஆகியோர் உரை யாற்றினர். மேலும், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன், ஆதித்தமிழர் பேரவை யின் நிறுவனத் தலைவர் அதிய மான் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். நிறைவாக, நூலின் மொழி பெயர்ப்பாளர் மு.ஆனந்தன் ஏற்புரையாற்றினார்.

முன்னதாக, இந்நிகழ்விற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவ ஞானம் தலைமை தாங்கினார். தமுஎகச மாவட்ட தலைவர் தி.மணி வரவேற்புரையாற்றி னார். இதைத்தொடர்ந்து நூலை ஆர்.நல்லக்கண்ணு  வெளியிட களச்செயல்பாட்டாளர் கள், படைப்பாளர்களான மு. வேலாயுதம்,  சி.பத்மநாபன்,  ச.பா லமுருகன்,  முனைவர் சுப.செல்வி, அ.அஷ்ரப் அலி,  சி.வெண்மணி,  ந.பன்னீர்செல்வம்,  மு.கார்க்கி,  இளவேனில்,  என்.ஜெகநாதன், மு.அப்துல் ஹக்கீம், மா.நேருதாசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும், நிகர் கலைக்குழுவின் தப்பாட்டம், இ.வெ.வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் பாடல்கள் கலைநிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வை  தங்க.முருகேசன்,  அ.கரீம்,  ம.ஜென்னீஸ்  ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி நன்றி கூறினார். இந்த நூல் வெளியிட்டு விழாவில் திரளா னோர் கலந்து கொண்டனர்.