சேலம், செப்.28- சேலத்தில் பாலர் சங்கத்தின் சார்பில் இந்திய சுதந்திர போராட் டத்தின் நாயகர்கள் பகத்சிங் மற்றும் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. செப்.27ஆம் தேதியன்று பகத் சிங்கின் 112 ஆவது பிறந்த தின மாகும். அக்.2ஆம் தேதியன்று மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினமாகும். இத்தலைவர் களின் பிறந்த நாள் விழா வியாழ னன்று சேலம் சிறை தியாகிகள் நினை வகத்தில் பாலர் சங்கம் சார்பில் எழுச்சி யுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பாலர் சங்க மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கே. ஜோதிலட்சுமி, மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஷோபனா, சம்பத், கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந் நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பாலகர் கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை நாகராஜ், சசிக் குமார், புருஷோத்தமன், பாக்யா, தமிழ், ராமச்சந்திரன், முத்து, தணிகை வேலன், மைத்ரேயன், வின்ஜெய், வெங்கடேஷ், மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.