ஈரோடு, ஜூன் 24- ஈரோட்டில் அரசு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரோடு, குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்க ளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்று உள்ளது. இவ்வி ழாவில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ தென்னரசு மற்றும் மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.வி.ராம லிங்கம் ஆகியோர் கலந்துகொண் டனர். அவ்விழாவில் கலந்து கொண்ட 2017-18 ஆம் ஆண்டு படித்த மாணவர் கள் சிலர் தங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என எம்எல்ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப் போது அந்த மாணவர்கள் சிலரை மட் டும் அழைத்து ஒரு வகுப்பறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இத னையறிந்து செய்தி சேகரிப்பதற் காக தமிழ் இந்து நாளிதழின் செய்தி யாளர் கோவிந்தராஜ் மற்றும் ஜூனியர் விகடன் செய்தியாளர் நவீன் ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது வகுப்பு அறையிலிருந்த எம்எல்ஏஇராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரதீப் செய்தியாளர் களை சட்டையைப் பிடித்து, கன்னத் தில் அறைந்து தள்ளிவிட்டுள்ளார். இதில், நிலை தடுமாறி நிருபர்கள் கீழே விழுந்தனர். மேலும், அவரது அடியாட்கள் கடுமையாகத் தாக்கிய தோடு, கடுமையான வார்த்தை களால் பேசி விரட்டியுள்ளனர். அப்போது பணியிலிருந்த 10 க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்டும் காணா தது போல் இருந்துள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்குள் ளான இருவரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய அதிமுக எம்எல்ஏ மகன் ரத்தன் பிரதீப் மற்றும் அடியாட் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு பத்திரிகையார்கள் சார் பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் மனுவும் அளித்துள் ளனர்.