tamilnadu

img

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கெரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 540 படுக்கை தயார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை, மார்ச் 25- கெரோனா பாதிப்பிற்குள்ளா னவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை இஎஸ்ஐ மருத்துவமனை யில் 540 படுக்கை தயாராக உள்ள தாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலு மணி தலைமையில்  அதிகாரிகளு டன்  ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கள் வேகப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த ஆலோ சனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எஸ்பி.வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டிய ளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக் கப்பட்டு வருகின்றது. பிரதமர் அறிவித்த 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஆகவே, அரசின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், கோவை மாவட்டத் தில் 314 பேர் தனிமைப்படுத்தப் பட்டு அவர்கள்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதி யில் இருந்து வருபவர்களை கண் காணிக்க 200 படுகைகள் கொண்ட  கண்காணிப்பு மையம் கருமத்தம்பட்டி பகுதியில் அமைக் கப்பட்டுள்ளது. இது வரை 546 பயணிகள் சோதனையிடப்பட்டு  அவர்களுக்கு கொரோனா பாதிப்பு  இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.  தற்போது, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில்  540 படுக் கைகள் தயாராக இருக்கின்றது. இதுதவிர தனியார் மருத்துவ மனைகளில் 100 படுக்கைகள் தயாராக உள்ளது. தேவையான வென்டிலேட்டர்கள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளது. தனி யார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதேபோல், கோவை மாவட்டத்தில் 8 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 240 படுகை வசதிகள் ஏற்படுத் தப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப் படுத்த 314  நபர்களிடம் அதிகாரி கள் தொடர்பிலிருந்து வருகின் றனர். தனிமைப்படுத்தப்பட்ட 314 நபர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை கொரோனா அறிகுறி  இருந்த  97 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.

இதில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதும், 2 பேருக்கு  கொரோனா வைரஸ் இருப்பதும்  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 27 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவிற்காக காத்து  இருக்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ்  குறித்து கோவை அரசு மருத்துவமனை யிலேயே  பரிசோதிக்கப்பட்டு  உடனுக்குடன் முடிவுகள் தெரி விக்கப்பட்டு வருகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  மேலும், வாளையார் உட்பட 8 சோதனை சாவடிகளில் 39 மருத்துவ குழுக்கள் சுழற்சி முறை யில் கண்காணிப்பு பணியில் இருக்கின்றனர். அனைத்து பேருந்து நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படு கின்றது. சிறைவாசிகள், மகளிர் சுய உதவிக்குழு மூலம் முக கவ சம் தயாரிக்கபட்டு வருகின்றது.  மக்கள் முழு கவனத்துடன் வீட் டிற்குள்ளேயே இருக்க  வேண்டும். சிலர் அதை  கடைபிடிக்காமல் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. வைட்டமின் சி உணவு வகை களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவற்ற அதிக அளவில் சாப்பிட வேண்டும். ரேசன்  கடை கள் மூலம் பொருட்கள் அனைத் தும் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. டோக்கன் சிஸ்டம் முறையில் பொருட்கள் விநியோ கிக்கப்படும். அதிக விலைகளில் பொருட்களை விற்கக்கூடாது  என அறிவுறுத்தப்பட்டு இருக்கின் றது. தமிழகத்தின் அனைத்து பகுதி களிலும்  குடிநீர் சீரான முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.