திருப்பூர், ஜூலை 23 - திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரி யத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் அரசு நிர்வாகம் வெளிப் படைத் தன்மையுடன், உண்மையான தகுதி உடையவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆ.சிகாமணி, மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் நூறு பேர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட வரு வாய் அலுவலரைச் சந்தித்து மனு அளித் தனர். இதில், திருப்பூர் வடக்கு வட்டம் நெருப் பெரிச்சல் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் நீர்நிலைப் புறம்போக்கு, நெடுஞ்சாலை புறம்போக்கு பகுதியில் உள்ளவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதாக அறிகிறோம். இக் குடியிருப்பில் மீதமுள்ள வீடுகளை நெருப்பெரிச்சல், வாவிபாளையம், பாரதிநகர், மே நகர், ஜெ.ஜெ. நகர், காளி பாளையம், கணக்கம்பாளையம், குரு வாயூப்பரன் நகர், தோட்டத்துப்பாளையம், ஜி.என்.கார்டன் ஆகிய பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இக்குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்த பயனாளிகள் பட்டியலை வெளிப் படைத் தன்மையோடு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் பதிலளிக்கையில், ஓடை புறம்போக்கு பகுதியில் வாழக்கூடிய மக்களை அங்கு அமர்த்துவதற்காக கட்டப் பட்ட அடுக்குமாடி குடியிருப்பு அது. ஓடை புறம்போக்கில் வசிப்போருக்கே போது மான எண்ணிக்கையில் இங்கு வீடுகள் இல்லை. இது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார். அதே சமயம் வெளிப் படைத் தன்மையோடு பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந் தோரும், வேறு சில அமைப்பினரும் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக கூறி, திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும் புகார்கள் வருகின்றன. மாவட்ட நிர்வாகம் வெளிப் படையாக இது குறித்து அறிவிக்கா விட்டால் அப்பாவி ஏழை மக்களை ஆளும் கட்சியினர் ஏமாற்றி பணம் பறிப்பது தொடரும். ஒரு வேளை ஆளும் கட்சி யினரின் சொல்படிதான் மாவட்ட நிர் வாகம் வீடுகளுக்குரிய பயனாளிகளை தேர்வு செய்கிறதோ என்ற ஐயமும் பலரிடம் ஏற்படுகிறது. இது குறித்து தெளிவாக விளக்கம் அளித்து நியாயமாக நடந்து கொள்வது மாவட்ட நிர்வாகத்தின் கடமை ஆகும் என்று நெருப்பெரிச்சல் பகுதி மக்கள் கூறுகின்றனர்.