கோவை, ஜூலை 14- கோவை சுல்தான்பேட்டை பகுதியில் சனியன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை கள் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், 1 ஆவது கிளைத் தலைவராக கமலம், செயலாளர் கம லாள், பொருளாளர் சித்ரா ஆகியோரும், 2 ஆவது கிளைத் தலைவராக பழனாத்தாள், செயலாளர் பார்வதி, பொரு ளாளர் சாந்தாமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னதாக, இக்கூட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.600 என கூலியை உயர்த்த வேண் டும். விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு கொரோனா கால நிவாரணமாக ரூ. 7ஆயிரத்து 500 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.