பொள்ளாச்சி, ஜுன் 6-தமிழ்நாடு மலைவாழ் மக்கள்சங்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு பின்பு வன கிராமங்களான சின்னார்பதி மற்றும் ஆழியார் அன்பு நகர் பகுதிகளில் மின் கம்பங்கள் நடப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுகாவிற்குப்பட்ட ஆழியார்அன்பு நகர் மற்றும் சின்னார்பதிவன கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வனவிலங்குகளின் அச்சுறுத்தலால் அப்பகுதியினர் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்தசில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் இரண்டு பேர் யானைதாக்கி பலியாகினர். இந்நிலையில் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உயர்ந்த மலைக்குன்றுகளில்தஞ்சம் அடைந்துள்ளனர். இப்பகுதி மக்களின் மின்சாரம்உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நீண்டவருடங்களாக தொடர் காத்திருப்புபோராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும், சோதனைச்சாவடி முற்றுகை போராட்டங்களும் நடைபெற்றது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ம் ஆண்டு மே மாதத்தில் சின்னார்பதி உள்ளிட்ட வனக்கிராமங்களுக்கு மின்சாரம் உள்ளிட்டஅடிப்படை வசதி உடனடியாக செய்து தரக்கோரி பொள்ளாச்சிசார் ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலபொதுச்செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சார் ஆட்சியர் ஜெயசித்ரா மற்றும்ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சிறப்பு வட்டாட்சியர் காயத்ரிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.இப்பேச்சுவார்த்தையில் வன கிராமங்களான ஆழியார் அன்பு நகர் மற்றும் சின்னார்பதி, புளியகண்டி, நவமலை உள்ளிட்ட வனக்கிராமங்களுக்கு உடனடியாக மின்சார வசதி செய்து தரவேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் கோட்டூர் பேரூராட்சியின்கீழ் மின் விளக்கு வசதிசெய்து தரநிதி ஒதுக்கியது. இதனையடுத்து புளியகண்டி பகுதியில் 12 தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. சின்னார் பதி உள்ளிட்ட மலைகிராமங்களுக்கு மின் வசதிவேண்டி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஓராண்டு கழித்து வியாழனன்று வன கிராமங்களான சின்னார்பதி மற்றும்ஆழியார் அன்பு நகர் வாய்க்கால்மேடு உள்ளிட்டபகுதிகளில் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் மின்விளக்குகள் அமைக்கும் பணிநடைபெற்றது. இதில் 21 மின்கம்பங்களும், 32 மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளதாக கோட்டூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் வில்லியம் ஜேசுதாஸ் கூறினார்.
மலை மக்கள் மகிழ்ச்சி
நீண்ட காலமாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தித்தரக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாகவே இன்று வன கிராமமான சின்னார்பதி மற்றும்ஆழியார் அன்பு நகர், வாய்க்கால் மேடுஉள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வசதிகிடைத்துள்ளது. இது மிகவும் மலைவாழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கழிப்பிடம், தொகுப்பு வீடு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தமிழக அரசு விரைந்து செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் தெரிவித்தார்.