பென்னாகரம், செப்.6- சமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் பென்னாகரத்தில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்கக் கல்வியை அழித்தொழிக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் இணைப்பதை உடனடியாக கைவிட வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்கள் மீது 17பி ஒழுங்கு நடவ டிக்கைகளை ரத்து செய்திட வேண்டும். மாணவர், ஆசிரியர் சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை-2019 வரைவை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் வெள்ளியன்று பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோவின் வட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், அரசு ஊழியர் சங்கத்தின் வட்டத் தலைவர் திம்ம ராய ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
இதேபோல், ஜாக்டோ-ஜியோ சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன், தமிழாசிரியர் கழக மாநில அமைப்புச் செயலாளர் இராசா.ஆனந்தன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் பி.எம்.கெளரன் ஆகி யோர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ருத்ரையன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.இராமஜெயம் , மாவட்டமகளிர் துணைக்குழு அமைப் பாளர் பி.எஸ்.இளவேனில், கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.பழனியம்மாள், தமிழ்நாடு நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ச.கவிதா, மாவட்டத் தலைவர் பி.துரைராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ.கேசவன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சி.எம்.நெடுஞ் செழியன், பொதுநூலகத்துறை ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் முனிராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.