கோவை, ஜூலை 27– மாணவர்களின் எதிர்கால கல் வியை பாதுகாக்க புதிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் கையெ ழுத்து இயக்கம் வெள்ளியன்று தொடங்கியது. மோடி தலைமையிலான மத் திய பாஜக அரசு தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அடுத்த தலை முறை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்பட வேண்டிய இந்த கல்வி கொள்கை, முற்றிலும் ஏழை, எளிய மாணவர்களை கல்விச் சாலையை விட்டு வெளியேற்றும் சூழ்ச்சியைக் கொண்டுள்ளது. மேலும், கல்வியை இந்துத்துவ மயப்படுத்தவும், வணிகமாக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்க பட்டுள்ளது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் 5லட்சம் கையெ ழுத்து என்கிற இலக்குடன் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் கையெ ழுத்து இயக்கம் வெள்ளியன்று துவங்கியது. பீளமேட்டை அடுத்த ஹோப்காலேஜ் ஜீவா நகரில் நடைபெற்ற இதன் துவக்க நிகழ்ச்சிக்கு கட்சியின் பீளமேடு நகரக்குழு செயலாளர் கே.பாண்டி யன் தலைமை தாங்கினார். புதிய கல்வி கொள்கையின் சூழ்ச்சிகள் குறித்து கட்சியின் மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.அமிர்தம் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், சிங்கை நகரக்குழு செயலாளர் வி.தெய்வேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். இதில், எதிர்கால மாணவர்க ளின் கல்வி உரிமையைப் பாது காக்க ஒரு கையெழுத்து என்கிற முழக்கத்தோடு மாணவர்கள், பெற் றோர்களிடம் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. இதில் ஏராள மான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்திட்டனர். இவ்வி யக்கத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ஜெயபாலன், கே.மனோகரன், ஆர்.வேலுசாமி, அஜய்குமார் மற்றும் மேகநாதன், ஜோதிபாசு உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.
மதுக்கரை ஒன்றியம்
இதேபோல், மதுக்கரை ஒன்றி யத்திற்குட்பட்ட மலுமிச்சம்பட்டி யில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிபிஎம் மதுக்கரை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்ச்சியை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம் துவக்கி வைத்தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பஞ்சலிங்கம், சுப் பிரமணி, மணி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.
கிழக்கு நகரக்குழு
இதேபோல், கோவை கிழக்கு நகரக்குழு பகுதியில் புதிய கல்வி கொள்கையின் அபாயம் குறித்த பிரச்சார இயக்கம் மற்றும் கையெ ழுத்து இயக்கம் சிபிஎம் கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர் தலைமை யில் நடைபெற்றது. கோவை காம ராஜபுரத்தில் துவங்கிய பிரச்சார இயக்கம் சிவானந்தகாலனி, காந் திபுரம், புலியகுளம் உள்ளிட்ட பகு திகளில் பிரச்சாரம் மேற்கொண்டு இராமநாதபுரம் பகுதியில் நிறை வடைந்தது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணை பொதுசெயலா ளர் யு.கே.சிவஞானம் உள்ளிட் டோர் உரையாற்றினர். இந்நிகழ்ச் சியில் ஆர்.ராஜன், என்.செல்வ ராஜ், நாகராஜ், சீலாராஜ் மற்றும் சுதா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.