tamilnadu

img

தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

சேலம், ஆக.25-  சேலம் உருக்காலையை மத்திய பாஜக அரசு தனியாருக்கு விற்பனை  செய்ய முழு அளவில் செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து சேலம் உருக்காலை அனைத்து தொழிற்சங்கம் சார்பில் உருக் காலை தொழிலாளர்கள் ஆலை முன்பு 20ஆவது நாளாக காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் உருக்காலை மதிப்பு மிக்க பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. சேலம் உருக்காலையில் தயாரிக்கப் படும்  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உலக அளவில் பிரசித்தி பெற்றவை,  சமையல் பாத்திரங்கள் முதல் வின்  கள ஆய்வுக்கு பயன்படும் பொருட் கள் வரை சேலம் உருக்காலையில்  தயாரிக்கப்பட்ட ஸ்டில் தகடுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் பணியில் ஒருபகுதியாக சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்ய முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு  படியாக உலக அளவில் டெண்டர்  விடும் நடவடிக்கையை முன்னெடுத் துள்ளது.   இதனை கண்டித்து சேலம் உருக் காலை தொழிலாளர்கள் பல கட்ட  போராட்டங்களை நடத்தி வந்த  நிலையில், தற்போது ஆலைக்குள்  தனியார் கார்ப்பரேட் நிறுவ னத்தினர் நுழையாத வண்ணம் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் 24 மணி நேரமும் காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். ஞாயிறன்று தொடர்ந்து சேலம் உருக்காலையை  பாதுகாக்க அங்கு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெற்று வருகிறது.  இதில் சிஐடியு மாநிலக் குழு  உறுப்பினர்கள் எஸ்.கே.தியாக ராஜன், ஆர்.வெங்கடபதி ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.  சேலம் உருக்காலை சிஐடியு தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.பன்னீர்செல்வம், ஐஎன்டியுசி செயலாளர் தேவராஜன்,  எல்பிஎப் செயலாளர் பெருமாள், எஸ்சி எஸ்டி  தொழிற்சங்க நிர்வாகி ரவிச் சந்திரன், மாணிக்கம், நிலம் கொடுத் தோர் சங்கத்தின் சார்பில் ராஜேந் திரன்உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.