tamilnadu

img

அரசாணையை மதிக்காத தனியார் கல்லூரி இந்திய மாணவர் சங்கம் புகார்

கோவை, நவ.6– அரசாணை (எண் 92) படி கல் லூரியில் சேர்ந்த மாணவர்களை கட்டணம் கட்ட சொல்லி நிர்பந் தித்து தேர்வு எழுத அனுமதிக்காத தனியார் கல்லூரியின் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந் திய மாணவர் சங்கத்தினர் கோவை  மாவட்ட ஆட்சியரிடம் செவ்வா யன்று புகார் அளித்தனர்.  அரசாணை (எண் 92( படி எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால் சமீப காலமாக தனியார் கல்லூரிகளில் அரசாணையை மதிக்காத போக்கு நடைபெறுகிறது. இதன்ஒருபகுதியாக கோவை  தனியார் நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர் களை கட்டணம் செலுத்தக்கோரி தொடர்ச்சியாக நிர்வாகம் மிரட்டி வருகிறது. இந்நிலையில் பருவ தேர்வுகள் வியாழனன்று துவங்க உள்ள நிலையில் அரசாணை (எண் 92) படி அரசு, கல்லூரி நிர்வாகத்திற்கு பணம் தராவிட்டால் அந்த பணத்தை மாணவர்கள் கொடுத்தால்தான் தேர்வு எழுத முடியும் என்று மாணவர்களை நேரு கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்தித்து வெளியேற்றியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இந் திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசாருதீன், மாவட்டச் செயலாளர் தினேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து சென்று மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளித்தனர். இம் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக் கான பருவத் தேர்வு எழுத அனு மதிக்க நடவடிக்கை எடுக்கப்படும உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.