tamilnadu

img

சுதந்திரப் போராளிகளை அங்கீகரித்து தில்லியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா

மக்களவையில் பி.ஆர்.நடராஜன் கேள்வி

புதுதில்லி, பிப்.6- சுதந்திரப் போராளிகளுக்கான நினைவுச் சின்னங்கள் சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், மக்களவையில் எழுப்பிய கேள் விகளும் அதற்கு மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அளித்த பதில்களும் பின்வருமாறு:  பி.ஆர்.நடராஜன்: அரசாங்கம் சுதந்திரப் போராளிகளை கவுரவிக் கும் விதமாக அவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்கள் அமைத்துள் ளதா? அப்படியெனில், நாடு முழு வதும் உள்ள அப்படிப்பட்ட போரா ளிகளின் விபரங்கள், குறிப்பாக தமிழக சுதந்திரப் போராளிகளின் விபரங்களை தெரியப்படுத்தவும்.  நாடு முழுவதிலும் உள்ள, நாட்டு விடுதலை, சுதந்திரத்திற்காக, தங்கள் உயிரை நீத்த சுதந்திரப் போரா ளிகளை, அங்கீகரித்து, கவுரவிக்கும் விதமாக தில்லியிலே ஒரு நினைவுச் சின்னத்தை அமைப்பதை அரசு பரிசீலிக்குமா?   நாடு முழுவதிலும், குறிப்பாக தமிழ கத்திலிருந்து சுதந்திரப் போராட் டத்தில் பங்கெடுத்து, உயிர் நீத்த சுதந் திரப் போராளிகள் மொத்த எண் ணிக்கை விபரங்கள் என்ன? இந்தியா வில், வெளிநாட்டினருக்கான நினை வுச் சின்னங்களில்,  நம் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த வெளி நாட்டினருக்கும் சுதந்திர போராளி களுக்கான நினைவுச் சின்னம் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள்?

இதற்கு மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி பதிலளிக்கையில், நினைவுச் சின்னங்களின் பணி, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டால்,  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) அந்த கட்டு மானத்தை நிறைவேற்றுகிறது. MoHUA இன் கீழ், CPWI தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவுச் சின்னத்தை  கலாச்சார அமைச்சகத்திற்காக, குஜ ராத்  மாநிலத்தில் தண்டியில் அமைத் துள்ளது. டாக்டர் அம்பேத்கர் நேட்டோய் நினைவு சின்னத்தை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்காக தில்லியில் அமைத்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று தங்கள் இன்னுயிர் நீத்த சுதந்திரப் போராளிகள் சம்பந் தமாக இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில், “தியாகிகளின் அகராதி” (Dictionary of Martyrs)  “இந்திய சுதந்திரப் போராட்டம்” (1857-1947) என்ற தலைப்பில் 5 தொகுதிகள் வெளி யிட்டுள்ளது. ஆராய்ச்சிகளின் போது, தங்களுக்கு கிடைக்கப்பெற்ற முதன்மை ஆதாரங்களின் அடிப்படை யில், 1857 முதல் 1947க்கு இடைப் பட்ட சுதந்திரப் போராட்ட காலத்தில், நாடு முழுவதிலுமிருந்து அதில் பங்கு கொண்டு தங்கள் வாழ்வை இழந்த தியாகிகளின் சரிதம் சுருக்கமாக இந்த தொகுதிகளில் காணப்படுகிறது. இந்த ஆராய்ச்சி பணி, சுதந்திர போரா ளிகளை விட, தியாகிகளை பட்டிய லிட்டிருப்பதை செய்துள்ளது. தமிழ் நாட்டின் தியாகிகள் 154 பேர் உட்பட நாடு முழுவதிலுமிருந்து 13521க்கு மேற்பட்ட தியாகிகள் பற்றி இந்த தொகுதிகளில் உள்ளது.  சுதந்திரப் போராட்டத்தில் பங் கெடுத்த வெளிநாட்டினருக்கான நினைவுச்சின்னங்கள் பற்றி எந்தத் தகவலும் பேணப்படவில்லை. இவ் வாறு மத்திய அமைச்சர் பதிலளித் துள்ளார்.