tamilnadu

img

ஹைட்ராக்ஸி குளோரோகுவின் பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

கோவிட்-19 சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகளை பரிசோதனையை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த, மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. இதனால் உலக அளவில் இந்த மத்திரையின் தேவை திடீரென அதிகரித்தது. இதை தொடர்ந்து, சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரான்ஸ் ,அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்தை பயன்படுத்தி ஆய்வுகள் செய்து வருகின்றன.

இந்த சூழலில், லான்சட் மருத்துவ ஆய்விதழ், ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. அதன்படி, கோவிட்-19 சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத்திரைகள் வெண்டிலேட்டர் பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும், இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.