tamilnadu

img

கரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உவான் நகரில் இந்த கரோனா வைரஸ் பாதிப்புடன் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கரோனா வைரஸ், சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த என்றும், வவ்வால்களில் இருந்து வந்தவை என்றும், மற்றொரு அறிந்து கொள்ள முடியாத இடத்திலிருந்து வந்தவை என்றும், பின்னர்  பாம்புகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்றும் சீன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 835க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, சவுதி ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, சீனா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, உவான், ஹாங்காங் உள்ளிட்ட 5 நகரங்களில் ரயில், பேருந்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.