சிதம்பரம், ஏப். 4-
சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட லால்பேட்டை, வடக்கு கொளக்குடி, உத்திரசோலை, காட்டுமன்னார்கோயில், ராஜாசூடாமணி, குப்பங்குழி, அழிஞ்சிமங்கலம், ஆழங்காத்தான், ஆயங்குடி, உத்திரசோலை, கீழகடம்பூர், மேலகடம்பூர், ஆதனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.பெரியகுளம், வடகரை கிராமங்களில் வயலில் கூலிவேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் வாக்குகள் கோரி உரையாற்றிய அவர்,“ சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை தோற்கடிக்க பாஜக, அதிமுக பல நூறு கோடிகளை செலவழிக்க கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.காட்டுமன்னார்கோயில் திமுக ஒன்றியச் செயலாளர் முத்துசாமி, நகரச் செயலாளர் கணேசமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், வி.தொ.ச தலைவர் மகாலிங்கம் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.