சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் தெருவைச் சேர்ந்த வேங்கடரத்தினம் மகன் நடராஜன்(54) இவர் குழந்தை பருவத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாணவர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். பின்னர் சிதம்பரம் மாணவர் சங்கத் தலைவராகவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இரண்டு முறை நகர செயலாளராகவும், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். தற்போது சிதம்பரம் நகர் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் மே 6-ந்தேதி சனிக் கிழமை மாலை 6 மணி அளவில் உடல்நலக் குறைவால் திடீரென மரணம் அடைந்தார். இது கட்சியினர் மற்றும் உறவினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் டி. ஆறுமுகம் மாநிலக் குழு உறுப்பினர்கள் மூசா, மாதவன். கட்சியின் மூத்த தோழர்கள் கலியபெருமாள், மகாலிங்கம். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, கருப்பையா, உதயகுமார், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், அசோகன். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச் செல்வம், வாஞ்சிநாதன், ராஜேஷ் கண்ணன், தண்டபாணி, ஆளவந்தார், ஜெயசீலன். குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி. சிதம்பரம் நகர செயலாளர் ராஜா. சிதம்பரம் நகர் குழு உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்.திமுக நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் விஜயராகவன், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் மனோகரன், அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம். எஸ்.என்.குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டேங்க் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால. அறவாழி, நகர செயலாளர் ஆதிமூலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் மணிவாசகம், சேகர், நகர செயலாளர் அன்சாரி. தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் தில்லை ஆர். மக்கின், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சம்மேளன சிறப்பு தலைவர்
பாலசுப்பிரமணியன், மதிமுக நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள். மார்க்சிஸ்ட் கட்சியினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள், சிதம்பரம் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இவரது தந்தை வேங்கட ரத்தினம் ஆரம்ப காலத்தில் சிதம்பரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்துச்சென்று கட்சியை வளர்த்தவர்களில் ஒருவர். இவரும் சிதம்பரம் மார்க்சிஸ்ட் கட்சியினர் நகர செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 96-வது வயதில் காலமானார்.