tamilnadu

img

உலகத் தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குங்கள்.... தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.....

சென்னை:
புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மக்கள் அளிக்கும் நிதி கொரோனா தடுப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதியுதவி வழங்குங்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுங்கள். நிதியுதவி செய்பவர்களின் விவரங்கள் பொது வெளியில் அறிவிக்கப்படும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் வீடியோவில் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய பிரதமருக்கு கடிதம்
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விபரம் வருமாறு;“கோவிட் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக் கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள் முதல் செய்து வருகின்றன.இதனைக் கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப் பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் என நிர்ணயிக்க வேண்டும்.பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய கீழ்க்குறிப் பிட்டுள்ள மூன்று நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும்.

1. நிலுவையிலுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகைகளை யும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

2. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல்வரி விதிப் பால் மத்திய அரசுக்குக் கிடைத் துள்ள வருவாய் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி அளிக்க வேண்டும்.

3. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற் கொள்ளத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவிகிதம் என்ற அளவிலிருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டும்”.இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.