tamilnadu

img

வீனஸ் பள்ளியில் பெண்கள் நல கருத்தரங்கம்

வீனஸ் பள்ளியில் பெண்கள் நல கருத்தரங்கம்

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்   பள்ளியில் மகளிர் நலம் குறித்த கருத்த ரங்கு நடைபெற்றது.  இந்த கருத்தரங்கிற்கு பள்ளியின் தாளாளர் எஸ். குமார் தலைமை தாங்கினார்.  இணை தாளாளர் ரூபியால்ராணி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ்போனிக்கலா வரவேற்றார்.  பள்ளியின் முதல்வர் நரேந்திரன் அறிமுக வுரையாற்றினார்.  இந்த கருத்தரங்கில் சிதம்பரம் அருள் மருத்துவமனையில் மருத்துவர்கள் பத்மினி கபாலிமூர்த்தி,  மகப்பேறு மருத்துவர்கள் பிருந்தா அருள்மொழி செல்வன், பவித்ரா மணி கண்ட ராஜன்,  மானஸ சரஸ்வதி ஆகி யோர் கலந்து கொண்டு பெண்கள் ஆரோக்கியம் குறித்து உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் பெண்கள் மகப்பேறு காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும், மாதவிடாய் சுழற்சி. பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள்.குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக பேசினர். இதனை தொடர்ந்து, ஆசிரியர்கள் உடல் ரீதியான மாற்றங்கள் குறித்து கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து  கலந்துரையாடினர்.  இதனை தொடர்ந்து  ஆசிரியைகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. விழாவில், சரோஜா வேலுசாமி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு சான்று வழங்கினார்.  வீனஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர் லியோ பெஸ்கிராவ்  உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.  ஆசிரியை கிருஷ்ணபிரியா நன்றி கூறினார்.