சென்னை, மே 7- டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடி யாக மீட்கவும், தில்லி மாநாட்டில் பங்கேற்று அடிப்படை வசதி யில்லாத இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை தமிழ கத்திற்கு அழைத்து வர தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்யநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞரின் வாதத்தை தொடர்ந்து மனு தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் வழி காட்டுதல்படி அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த நிலையில்தான் தப்லீக் ஜமாத்தினர் முகாம்களில் உள்ளனர். மேலும், அரசு அவர்களை செலவு செய்து அழைத்து வருவ தற்கான தார்மீக பொறுப்பை தட்டிக்கழித்தால், தமிழகம் திரும்ப ஆகும் செலவை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளனர் என்றார். இதையடுத்து நீதிபதிகள், டெல்லி முகாமில் உள்ளவர் களை விரைவாக மீட்டுக் கொண்டு வருதற்கு எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மே 12 அன்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.