tamilnadu

img

இடைத்தேர்தலிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: வைகோ

சென்னை, ஏப்.20-தமிழகத்தில் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமையன்று(ஏப்.20) கட்சி நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத் தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், ஆ.ராஜா, ஐ.பெரியசாமி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த சந்திப்புக்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த துடன், தொடர்ந்து நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தேர்தல் பணிக்கு ஊக்கம் அளித்த திமுக தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்பது எங்களின் நம்பிக்கை. இதே போல் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற மதிமுக பாடுபடும்.தேர்தலின்போது வன்முறை ஏற்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவேண்டும். இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமாக உள்ள பொன்னமராவதியில் அமைதியை நிலைநாட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். ரவிக் குமார், வன்னியரசு ஆகியோர் உடனிருந்தனர்.