tamilnadu

img

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்.... தமிழக மக்கள் நலன் காக்க தொடர்ந்து போராடுவோம்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவல்...

சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மகத்தான வெற்றியை சாத்தியமாக்கிய தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வரவேற்கத்தக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடரும் என எதிர்பார்க்கிறோம்.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்- முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை  நடத்தி, தவறிழைத்தவர்களை தண்டிக்க தமிழக அரசுமுன்வர வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், 

மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக உறுதியுடன் போராடுவோம்.

தமிழக மக்களின் நலன்காக்க, தமிழகத்தின் உரிமைகளை மீட்க சுயேச்சையாகவும், தோழமைக் கட்சிகளோடு இணைந்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.

கூடுதல் 3-ஆம் பக்கம் பார்க்க...  

சிபிஎம் மாநிலக்குழு அறைகூவல் கே.பாலகிருஷ்ணன் பேட்டி...