tamilnadu

விழுப்புரம்: 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று....

சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை  தொற்று ஏற்பட்டுள்ளதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் (மியூகோர் மைகோசிஸ்) என்ற தொற்று பரவத் தொடங்கியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கோலியனூரைச் சேர்ந்த 52 வயது நபர், திண்டிவனத்தைச் சேர்ந்த 65 வயது நபர் ஆகிய 3 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் விழுப்புரம் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், “ஆங்கிலத்தில் ‘மியூகோர் மைகோசிஸ்’ என்ற மருத்துவப் பெயரால் அழைக் கப்படும் கருப்பு பூஞ்சை மிகவும் அரிதான, அதே நேரத்தில் மிகவும் கொடிய நோயாகும்.இந்த பூஞ்சை நோய் அனைவரையும் தாக்காது என்பதால் அச்சம் தேவையில்லை என்று தெரிவித்தனர்.