சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கோ.வீரய்யன். இவரது மகன் வெற்றிச்செல்வன் (50) வெள்ளியன்றுஇரவு சென்னையில் காலமானார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெற்றிச்செல் வன், மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள் ளியன்று உயிரிழந்தார்.இவருக்கு கவிதா என்றமனைவியும் 2 மகன்களும்உள்ளனர். சென்னை அம் பத்தூர் விஜயலட்சுமிபுரம் காந்தி தெருவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தமிழ்நாடுயூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ்அமைப்பின் மாநிலத் தலைவர் பிஎஸ்டி.புருஷோத்தமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அவரது உடல் அம்பத்தூர் டன்லப் அருகே உள்ள மயானத்தில் அடக் கம் செய்யப்பட்டது.