tamilnadu

img

வேதா இல்லம் அரசுடமை - அரசாணை வெளியீடு

சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த இல்லத்தைதமிழக அரசு அரசுடைமையாக்கியது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், வேதா இல்லத்தில் 4 கிலோ தங்கம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட ஒட்டு மொத்தமாக 32 ஆயிரத்து 721 பொருட்கள், 11 தொலைக் காட்சிகள், 38 குளிர்சாதன பெட்டிகள், 29 தொலைபேசிகள், ஓட்நர் உரிமம், வருமான வரி உள்ளிட்ட 653 ஆவணங்கள், துணிகள், போர்வைகள் என 10 ஆயிரத்து 448 பொருட்கள், 8376 புத்தகங்கள் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.