சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமதுயூசுப் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், கவலையையும் தருகிறது. சிறந்த பண்பாளர். அனைவரிடமும் மிகவும் இனிமையாக பழகும் குணம் கொண்டவர். அவரது மறைவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின்நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களுக்கும், விடுதலை சிறுத் தைகள் கட்சியினருக்கும், மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக் கும் தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.