tamilnadu

img

மே 22 அகில இந்திய எதிர்ப்பு தினம் நாளை தீக்கதிர் சிறப்பிதழ்....

கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற முயற்சிக்கப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதற்கான சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசும் இதற்கான முயற்சியில் முனைப்பாக இறங்கியுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகமுதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றப்படுகின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தனியாருக்கு தாரை வார்க்கப்படு கிறது. தொழிலாளர் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை கண்டித்து மே 22ஆம் தேதி அகில இந்திய எதிர்ப்புத் தினமாக கடைபிடிக்க அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்கள், போராட்டங்கள் நடைபெறவுள்ளன. அகில இந்திய எதிர்ப்பு தின சிறப்பிதழாக தீக்கதிர் 21-5-2020 அன்று வெளி வருகிறது. கூடுதல் பிரதி தேவைப்படும் கட்சியின் மாவட்டக்குழுக்கள், வர்க்க வெகுஜன அமைப்புகள் அந்தந்த பதிப்பு பொது மேலாளர்களிடம் 20-05-2020 அன்று மதியம் 12மணிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 
முதன்மை பொது மேலாளர்