tamilnadu

img

கால்நடை மருத்துவப் படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை:
ஆன்லைன் மூலமாக கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு மே மாதம் 8 முதல் ஜூன் 17 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பி.வி.எஸ்.சி. எனப்படும் கால்நடை அறிவியல் இளங்கலைப் படிப்புகளுக்கு 14 ஆயிரத்து 695 பேர், பி.டெக்., உணவு தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 2 ஆயிரத்து 427 பேர் என மொத்தம் 17 ஆயிரத்து 122 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.இந்நிலையில் தரவரிசைப் பட்டியலை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழ கத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். பி.வி.எஸ்.சி. படிப்புக்கான தரவரிசை பட்டியலில் 200-க்கு 199 கட் ஆப் மதிப்பெண் எடுத்த தருமபுரியைச் சேர்ந்த சுவாதி, தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேன்சில்வியா, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஹர்ஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.