தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு பொதுச்சேவையில் சேர்க்கப்பட்டுள்ள நீதித்துறையில் 50 உதவி அரசு வழக்குரைஞர் , கிரேடு II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : தமிழ்நாடு பொதுச்சேவை - நீதித்துறை
பணி : உதவி அரசு வழக்குரைஞர்
மொத்த காலியிடங்கள் : 50
தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் , சட்டத்துறையில் பி.எல் பட்டம் பெற்று , பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்.
மேலும், தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ. 56,100 - ரூ. 1,75,500 வழங்கப்படும்
வயது : 34 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பதிவு கட்டணமாக ரூ.150 , முதல்நிலை தேர்வுக்கு ரூ.100 , முதன்மை தேர்வுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.
முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி : 06.11.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 24.09.2021
மேலும் விபரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையமுகவரியில் சென்று தெரிந்துகொள்ளவும்.