சென்னை
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 2-ஆம் கட்ட ஊரடங்கைச் செயல்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கு மே 3-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் சில தளர்வுகளை மேற்கொள்ள மத்திய உள்துறை அனுமதி அளித்தது.
ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு தளர்வு முடிவில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்த நிலையில், மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வு கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது எனினும் தற்போது நடைமுறையில் இருக்கும் சில கட்டுப்பாடுகள், விலக்குகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று குறைந்தால் வல்லுநர்குழுவின் ஆலோசனைப்படி நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.