tamilnadu

img

வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடையில்லை

சென்னை:
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை வந்தது. அப்போது, அரசு தரப்பில்,  2017 முதல் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி  போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வமாக இல்லமாக மாற்றுவது தொடர்பாக அரசு பரிசீலினை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் நினைவில்லாமாக மாற்றப் பட்டால் மக்கள் நடமாட்டம் அதிகமாகி போயஸ் கார்ட்ன் பகுதி பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது ஏனென்றால், ஜெயலலிதா இருந்தபோது கடந்த 25 ஆண்டுகளாக அந்த பகுதியில் மக்கள் கூட்டம் இருந்துள்ளது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே போயஸ் தோட்ட குடியிருக்கும் மக்களின் குறைகளை பரிசீலித்து சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பின் வாதங்களை பதிவு செய்த நீதிபதி, கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தை எட்டாத நிலையில், போயஸ் கார்டனில் குடியிருப்போர் அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தலைவர்கள் வாழ்ந்த இல்லங்கள் நினைவில்லமாக மாற்றப்படுவது புதிதல்ல என கருத்து தெரிவித்த நீதிபதி, ஜெயலலிதாவின் இல்லத்தை மக்கள் பார்வையிட நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள் ளது. மேலும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்தபகுதி மக்களின் பகுதி எதிர்ப்பு பரீசிலிக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளதால் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி நினைவில்லாமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.