உளுந்தூர்பேட்டை, மார்ச் 14- உளுந்தூர்பேட்டை பேரூ ராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர், கட்டிட சுவர்களில் பிறர் அசுத்தம் செய்யாமல் இருக்க இந்திய விடு தலைப் போராட்டங்களில் ஈடு பட்ட தேசத் தலைவர்களின் படங் கள் வண்ணங்களில் வரையப்பட்டி ருந்தது. இந்நிலையில் வியாழக்கி ழமை இரவு விஷமிகள் சிலர் டாக்டர் அம்பேத்கர் படத்தின்மீது சாணி பூசிவிட்டு ஓடியுள்ளனர். இதனை கண்டித்தும், விஷமிகள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரியும் உளுந் தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிரச்சினைக்கு தீர்வு காண்கி றோம் எனக்கூறி காவல்துறையின ரும், கல்வித்துறையினரும் பள்ளி சுவற்றில் வரையப்பட்டிருந்த படங்களோடு பள்ளியின் உள்ளே வகுப்பறை கட்டிட சுவற்றில் வரை யப்பட்டிருந்த மகாத்மாகாந்தி, ஜவஹர்லால்நேரு, அம்பேத்கர், பாரதியார், வீரபாண்டிய கட்ட பொம்மன், ஜான்சிராணி, வேலு நாச்சியார், விவேகானந்தர் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட விடு தலைப் போராட்ட தலைவர்களின் படங்களை பெயிண்ட் அடித்து மறைத்தனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்கு றிச்சி மாவட்ட செயலாளர் டி.ஏழு மலை, செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், டி.எஸ்.மோகன், நகர செயலாளர் கே.தங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ. ஜெயக்குமார், பி.ஸ்டாலின், பி. சேகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் “சிபிஎம் சார்பில் இதனை வன்மையாக கண்டித்த தோடு, குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு பதிலாக தலைவர்க ளின் படங்களை பெயிண்ட் அடித்து மறைத்தது குற்றவாளிகளுக்கு காவல்துறை அடிபணிந்ததுபோல் உள்ளது. இது தவறான முன்னு தாரணத்தை ஏற்படுத்துவதோடு சாதிய மோதலை ஏற்படுத்த முய லும் விஷமிகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்துவிடும் என எச்சரித்தனர்.