tamilnadu

img

பிப்.2-ல் சட்டமன்றம் கூடுகிறது...

சென்னை:
2021 ஆம் ஆண்டின் முதலாவது தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி கூடுகிறது. 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது.   சென்னை வாலாஜா சலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்திலுள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.