சென்னை:
மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர் உரிமத்தை உற்பத்தி பணிகளுக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் முறையிட வெள்ளியன்று (செப். 3) கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுக்கவே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந் துள்ளன. அந்த தொழிற்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. அனல்மின் நிலையம், துறைமுகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் ஒப்பந்த தொழிலாளர் முறையை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. தொழிற்சங்கம் இல்லாத நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. உழைப்பு சுரண்டப்படுகிறது என்பது கூடத் தெரியாமல் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அடிமையைவிட மோசமாக தொழிலாளர் நடத்தப்படுகிறார்கள்.
எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் சிக்கால் காபி டே, பிஜிஆர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள் ளன. அனல்மின் நிலையத்தில் கூட குறைந்தபட்சக் கூலி கூட வழங்கப் படுவதில்லை. இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட எந்த கோரிக்கையும் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. அதிமுகவே பாஜவின் ஒப்பந்த அரசாக செயல்பட்டது என்று குற்றம் சாட்டினார்.அனைத்து துறைகளிலும் ஒப்பந்த முறை புகுத்தப்பட்டு தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு முதலாளிகளின் கைப்பாவையாக செயல்பட்டது. தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து கண்டு கொள்ளவேயில்லை. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமற்ற பணியில் மட்டும்தான் பணியமர்த்த வேண்டும். அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால் எந்த சட்ட சரத்தும் இந்த நிறுவனங்களில் அமலாகவில்லை. மேலும் அவர்களை நிரந்தப் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்களில் இஎஸ்ஐ, பிஎப் கூட கிடையாது.
வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு நிறுவனம் தொடங்கி, இங்குள்ள தொழிலாளர்களை ஏய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக அதிகாரிகளும் செயல் படுகின்றனர். நிறுவனங்கள் மீது அளிக்கும் எந்த புகார் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.புதிய அரசு இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு கட்ட வேண் டும். தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த தொழிலாளர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம் என அறிவித்துள்ளார்கள். தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய் யப்படும் என்றும் வேலைவாய்ப்பை அதிக்கப்படுத்துவோம் என்றும், தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் படுத்துவோம் என்றும் அரசு அறிவித்துள்ளது. சட்டத்தில் உள்ள சலுகைகளையும், உரிமைகளையுமே கோருகிறோம். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக நிறுவனங்கள் செயல்படுகின்றன. எனவே இவற்றையெல்லாம் முறைப்படுத்தி அரசு படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஜி.சுகுமாறன்
சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலன தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களே அதிகளவில் உள்ளனர். இந்த நிறுவனங்கள் முறைப்படி அமலாக்க வேண்டிய எந்த சட்டங்களையும் அமல்படுத்துவதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தக் கோரினால் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் ஈடுபடுகின்றன. சட்டங்களை அமலாக்க மறுக்கும் முதலாளிகள் மீது அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 480 நாட்கள் பணி செய்தாலே அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்கள் கூட நிரந்தரம் செய்யப்படுவதில்லை. பணி பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறர்கள். அரசுத் துறைகளில் கூட இந்த சட்டங்கள் அமல் படுத்தப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மாசுவால் அந் நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்கள் பல்வேறு நோய்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். எனவே புதிய அரசு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநிலம் முழுவதும் உள்ள நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கி பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத் தில் பெரிய, சிறிய தனியார் தொழிற் சாலைகள், அரசு நிறுவனங்கள் உள் ளன. இந்த மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டமாக அரசு அறிவித்து, தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. நிரந் தரத் தொழிலாளர்கள் 70 விழுக்காடும், ஒப்பந்த தொழிலாளர்கள் 30 விழுக்காடும் இருக்க வேண்டும். ஆனால் நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்களே கூடுதல் எண்ணிக்கையில் உள்ளனர்.
வல்லூர் அனல்மின் நிலையம், சிபிசிஎல், டீசால், சென்னை மெட்ரோ, காமராஜர் துறைமுகம் போன்றவற்றில் முழுமையாக ஒப்பந்தத் தொழிலாளர்களே உள்ளனர். எல்.அன்.டி., அதானி துறைமுகத்தில் 8 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கேண்டின் உள்ளிட்ட எந்த சலுகையும் கிடையாது. பாதுகாப்பு சாதனங் கள் வழங்கப்படுவதில்லை. தொழிற் சாலை சட்டங்களும் இவர்களுக்கு பொருந்தாது என்ற நிலையே உள்ளது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக தனி கவனம் செலுத்தி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், சிஐடியு திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.