tamilnadu

img

மீன்பிடி தடைக்காலம் முடிந்தது

சென்னை:
தமிழ்நாட்டில் மீன்படி தடைக்காலம் முன்கூட்டியே முடிவுக்கு வந்ததால் மீன வர்கள் கடலுக்கு சென்றனர்.தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையும் தடை விதிக்கப் பட்டது.

கொரோனா ஊரடங்கில் முன்னெச்சரிக்கையாக மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை 17 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்ததால் மீன்பிடி தடை காலத்தை 47 நாட்களாக மத்திய அரசு குறைத் தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக நள்ளிரவு முதல் கடலுக்குச் சென்றனர்.