tamilnadu

img

பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிதி பற்றாக்குறை என்றுகூறி 6 மாதமாக வழங்காமல் உள்ள ஜிபிஎப் கணக்கிலிருந்து கடன் வழங்க வேண்டும், சரண்டர் பணம், இரவு நேரப்படி, இரட்டிப்பு ஊதியம் போன்றவற்றை தர வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று ( மே 9) மத்திய சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சென்னை கிளைத் தலைவர் வி. சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர், வடக்கு மண்டல செயலாளர் ஆர்.ரவிக்குமார், மாநிலச் செயலாளர் எம். தயாளன் மத்திய சென்னை கிளை செயலாளர் எஸ். கண்ணன் பொருளாளர் எம். செந்தில் குமார் உள்ளிட்டோர் பேசினர்