சென்னை, ஜூன் 6-நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழக மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-ஒரு மதிப்பெண் குறைவாக பெற்றதால், நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற இயலாது என திருப்பூர் மாணவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டுள்ளார். அதே போல் பட்டுக்கோட்டை வைஷியாவும் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தத் துயர நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை தருகிறது. அந்த மாணவிகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்துகிறது. அவர்களது பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. உயிரிழந்த மாணவிகளின் குடும் பத்துக்கு மாநில அரசு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணாக்கர்கள், தொடர்ந்து தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வது மிகுந்த வருத்தத்தை தருகிறது. இத் துயர நிகழ்வுகளுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற்றிருந்தால் இத்தகைய துயர நிகழ்வுகள் நடைபெற்றிருக்காது. மத்திய-மாநில அரசுகளின் தமிழக மாணவர் விரோதப் போக்குதான் மாணவிகளின் உயிரிழப் பிற்குக் காரணம். மத்திய மாநில அரசுகளின் தமிழக மாணவர் விரோதப் போக்கை கண் டித்தும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கை பெற்றிடவும், அனைத்து மதச்சார் பற்ற, ஜனநாயக இடது சாரி சக்திகளும், மாணவர்களும் ஒன்றுபட்டு போராட முன் வர வேண்டும்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு, நீட் நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற்றிடவகை செய்யும் இரண்டு மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஏகமனதாக நிறைவேற்றப் பட்டன. அம்மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய மோடி அரசு பெற்றுக் கொடுக்கவில்லை. தமிழக எடப்பாடிஅரசும் மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.