சென்னை, ஜூலை 10- அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், தென் மேற்கு பருவக்காற்று, வட தமிழ கம் மற்றும் தென் ஆந்திராவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரண மாக மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக கூறப்பட்டுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக கடலூர், நாகை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பம் குறையும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.