சென்னை, மார்ச் 24- 2020-21ஆம் நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கச்சட்ட முன்வடிவு நிறைவேறியது. சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மார்ச் 24) நிதி ஒதுக்கச் சட்ட மசோதாவை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 2020-21ம் நிதியாண்டிற்கு மாநிலத் தொகுதி நிதியத்திலிருந்து துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு அனுமதியளிக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.