நடைபெறவுள்ள தேர்தலில், அதிமுக, பாஜக கூட்டணியை முறியடிக்க திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளுடன் சேர்ந்து தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளை செய்வது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் பலத்துக்கேற்ப கூடுதலான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவது; வரும் சட்டமன்றத்தில் உழைப்பாளி மக்களின் குரலை ஒலிக்கும் வலுவான கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுவது எனத் தீர்மானித்துள்ளோம். அதையொட்டி
வரும் 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். வேலைவாய்ப்பை பெருக்குவது, சுகாதாரம், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட அடிப்படையான பிரச்சனைகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது என முடிவெடுத்திருக்கிறோம்.
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், சிபிஐ(எம்)