சுத்தானந்த பாரதியார் 1897 ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் நாள் பிறந்தார்.இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.இவர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ‘பாரத சக்தி’ எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாகத் தொண்டாற்றியவர்.
திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார். 1968 ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலிதென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.1984ல் தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்தபாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், “பாரத சக்திமகாகாவியம்” அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது. இவர் 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் நாள் காலமானார்.
பெரணமல்லூர் சேகரன்