சென்னை:
விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவருமான தோழர் என். சங்கரய்யாவின் நூற்றாண்டு வியாழனன்று தொடங்கியது.
100ஆவது பிறந்த நாளையொட்டி வியாழனன்று(ஜூலை 15) அதிகாலையில் தனது தாய்-தந்தை மற்றும் மனைவிநவமணியம்மாள் ஆகியோரது திருஉருவப்படங்களுக்கு தோழர் என்.சங்கரய்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொட ர்ந்து அவரது மகன்கள், மகள், மருமகள்கள், மருமகன், பேரன்,பேத்திகள், கொள்ளுபேரன்-பேத்திகள், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துப்பெற்றனர்.அதன்பிறகு, நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது வருமாறு:- நூறாவது ஆண்டில்அடியெடுத்து வைத்திருக்கும் தோழர் என். சங்கரய்யா தனது 19ஆவது வயதில், அமெரிக்கன்கல்லூரி மாணவராக இருந்தபோது, இந்தி திணிப்பை எதிர்த்து அன்றையமுதலமைச்சர் ராஜாஜிக்கு எதிராககருப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்டார். அதன் மூலம் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக,தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடுமுழுக்க வெள்ளை ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சுரண்டல் முறையை எதிர்த்தும், வர்ணாசிரம தர்மம் என்கிற மனுநீதி உருவாக்கியுள்ள கொடுமையான சாதிய ஒடுக்கு முறையை எதிர்த்தும், பட்டியலின மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைப்பாளி மக்களுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராட்டங்களை நடத்தியிருக்கிறார். தாய்மொழிக் கல்வி வேண்டும் என்று பலமுறை சட்டமன்றத்தில் வாதாடி யிருக்கிறார் தோழர் என்.சங்கரய்யா.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பே, மத மறுப்புத் திருமணத்தை செய்து கொண்டு, தன் இல்லத்தில் இருக்கக் கூடிய ஏராளமான தம்பதிகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் தோழர் என். சங்கரய்யா.வாழ்க்கையே போராட்டமாக, போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்திருக்கும் அப்பழுக்கற்ற தலைவர் அவர். எளிமையான வாழ்க்கை, பழகுவதற்கு இனிமையானவர். அதேசமயத்தில், மக்களின் உரிமைகளுக்காக போராடுகிற எரிமலையாய் வாழ்ந்து காட்டியிருக்கிற அருமைத் தோழர் என். சங்கரய்யா.இந்திய ஒன்றியத்தில் பாஜகவின் மதவெறி ஆட்சி, நாட்டையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் பொருளாதார வாழ்வை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாசிச குணம் கொண்டிருக்கும் பாஜக ஏகாதிபத்திய, ஏகபோக கார்ப்பரேட் அரசாக மாற்றிவிட்டதை எதிர்த்தும் சமர்புரிவதற்கு நாட்டிலுள்ள அனைத்துமதச்சார்பற்ற சக்திகளுக்கும் என்றென்றை க்கும் உந்து சக்தியாக திகழ்வார் தோழர்என். சங்கரய்யா.
இந்த ஆண்டு முழுவதும் தோழர் என். சங்கரய்யாவின் நூற்றாண்டு விழாவை பல்வேறு நிகழ்ச்சிகள் முலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாட உள்ளது. இதன் மூலம், இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட காலத்தில் நடந்த போராட்டங்கள் குறித்தும் தோழர் என். சங்கரய்யாவின் 8 ஆண்டு சிறை வாழ்க்கை, மூன்றாண்டு கால தலைமறைவு வாழ்க்கை அனைத்தையும் மாநிலம் முழுக்க எடுத்துச் சென்று அர்ப்பணிப்பு உணர்வோடு இளைஞர்கள் வாழவேண்டும்.
சாதி, மத சக்திகளை எதிர்த்துப் போராடி சமதர்ம சமுதாயத்தை உருவாக்கப் போராட வேண்டும். சாதியில்லாத தமிழகம், மதவெறி இல்லாத தமிழகம் என்கிற ஒரு தமிழகத்தை உருவாக்குகிற அந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற அந்த வேண்டுகோளோடு தோழர்என். சங்கரய்யாவின் நூற்றாண்டுவிழா நடைபெறும்.
பிரகாஷ்காரத் - கனிமொழி வாழ்த்து
ஜூலை 15 ஆம் தேதி தோழர் என் சங்கரய்யாவின் 100ஆவது பிறந்த நாளையொட்டி கட்சியின் பொதுச் செயலாளர் யெச்சூரி, கட்சியின் மாநிலச் செயலாளர், மத்தியக்குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் குறிப்பிட்ட அளவில் மட்டும் நேரில் வாழ்த்து தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது. எனவே, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், கனிமொழி எம்பி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுஉறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்ட பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தோழர் என். சங்கரய்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த னர்.