சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட, தென் சென்னை மாவட்டக்குழு சார்பாக மாநில பொதுச் செயலாளர் தோழர் ஆ.செல்வம் போராட்டத்தை வாழ்த்தி பேசினார். இதில் மாநிலத் தலைவர் அன்பரசு, மாநில துணைத் தலைவர் ஞானத்தம்பி, மாநிலச் செயலாளர் நம்பிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.