சென்னை:
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் செவ்வாய் கிழமை முதல் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெ. டன் ஆக்சிஜன் கிடைக்கும்.தொழில்துறையினர் மற்றும் வணிகர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில் துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன உற்பத்திக்காகவும் அதை பெறுவதற்காகவும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்துறை முடுக்கிவிடப் பட்டுள்ளது. வரும் காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.