சென்னை, ஆக.29- சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழனன்று(ஆக.29) நடைபெற்றது. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி உள்பட அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு எம்.பி.க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படு கிறது. அதை முறையாக தொகுதி களுக்கு செலவு செய்வது குறித்து கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். மக்களின் அடிப்படை தேவை களை நிறைவேற்றும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.