சென்னை, ஜன.27- அப்பல்லோ மருத்துவமனை, தெற்காசியாவில் மிகவும் மேம்பட்ட முதுகெலும்பு அறுவை சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது. மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப்சி ரெட்டி மற்றும் துணைத் தலை வர் ப்ரீதாரெட்டி ஆகியோர் முன்னிலையில் இந்த நிறுவ னத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்பல்லோ முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிறுவனம் சிறப்பு முதுகெலும்பு அறுவை சிகிச்சை சேவையை வழங்கு கிறது. இது சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சை களுக்கு “எக்செல்சியஸ் ஜிபிஎஸ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை ரோபோ” எனப்படும் மிகவும் மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் அமைப்பின் மூலம் அனைத்து கோணங்களிலும் மிகச்சிறந்த பராமரிப்பை வழங்கும். இந்த முன்னேற்றமானது, நோய்த் தொற்றுகள், உள் வைப்புத் தவறுகள், திருத்த அறுவை சிகிச்சைகள், கதிர்வீச்சு வெளிப்பாடுகள் மற்றும் நோயாளி மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய காலம் ஆகியவற்றைக் குறைக்கிறது என்று மருத்துவமனையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.