tamilnadu

img

சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து: தடை இல்லை

சென்னை:
சென்னை நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமையன்று முதல் நடைபெறும்  சிறப்புஒலிம்பிக் சர்வதேச கால்பந்துப் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிறப்பு ஒலிம்பிக் கூட்டமைப்புடன் இணைந்து சிறப்பு ஒலிம்பிக் பாரத், ஆசியா-பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் ஆகியவற்றின் சார்பில்  சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. போட்டிக்கானவீரர்களை தேர்வு செய்ததில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை என்றும், போட்டிக்கான நிதியை சிறப்பு ஒலிம்பிக் பாரத்- தமிழ்நாடு பகுதி இயக்குநர் பால்தேவசகாயம், ஆசிய- பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் மேலாளர் நாகராஜன் ஆகியோர் கையாடல் செய்ததாகவும் குற்றம் சாட்டி, வினாயக் என்ற சிறப்பு குழந்தையின் தாய்மனோ ரஞ்சனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின்போது, விளையாட்டு வீரர்கள் தேர்வு தெளிவாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடந்திருக்க வேண்டும் என்றும்  இரு அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் குழந்தைகளை தேர்வு செய்து விட்டு, தகுதியான விளையாட்டு வீரர்களை ஒதுக்கி விட்டதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. போட்டிக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், மூன்று சிறப்பு குழந்தைகளை போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத, பால் தேவசகாயம், நாகராஜன் ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள் , அ தனை உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு செலுத்த உத்தரவிட்டனர்.