tamilnadu

img

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்

திருவள்ளூர், மார்ச் 11- சாதி ஆணவப் படுகொலை களை தடுக்க வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலி யுறுத்தினார். சிபிஎம்  24-வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடை பெறவுள்ளது. இதையொட்டி, "சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பில் திருவள்ளூரில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது.  "அரசியல் சாசனத்தை மதிக்காத பாஜக" இந்நிகழ்வில் பேசிய பெ.சண்முகம், "சட்டத்தின் முன் அனைவரும் சமம், சமமான வாய்ப்பு என்பதுதான் இந்திய அரசியலமைப்பின் சாரமாகும். சாதாரண குடிமக்கள் முதல் குடி யரசுத் தலைவர் வரை அரசிய லமைப்புச் சாசனத்தை ஏற்றுத்தான் வாழ்கிறார்கள். ஆனால், ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜக, அரசியல் சாசனத்தை மதிக்க மாட்டோம், ஆர்எஸ்எஸ் சாசனத்தைத்தான் நடைமுறைப்படுத்துவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது" என்றார். "100 ஆண்டுகளுக்கு முன்பே சாதிப் பாகுபாடு, தீண்டாமைக் கொடுமை, மனிதனை மனிதன் சுரண்டுவது ஆகியவற்றிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். களத்தில் நின்று போராடி, வெற்றி யும் பெற்றவர்கள் கம்யூனிஸ்டுகள்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார். "பண்ணை  அடிமைகளுக்கு விடுதலை" "கீழ் தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்கள், பட்டியல் சாதி மக்கள் பண்ணை அடிமைகளாக வைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய, சாதி ரீதியான ஒடுக்குமுறைகளிலிருந்து மீட்க, வீரம் செறிந்த போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றது கம்யூ னிஸ்ட் இயக்கம்" என்றார். "அதன் மகத்தான தலைவர் பி.சீனிவாசராவ், பிறப்பால் பிரா மணர் என்றாலும், கம்யூனிஸ்டாக வளர்ந்து, பண்ணை அடிமைகளாக இருந்த பட்டியல் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். இப்படி ஏராளமான தலைவர்கள் பட்டி யல் மக்களுக்காக, அவர்க ளின் விடுதலைக்காகப் போராடி யுள்ளனர்" என நினைவு கூர்ந்தார்.  "சாதி ஆணவக் கொலைகள் அதிகரிப்பு" "தமிழ்நாட்டில் சாதி ஆண வக் கொலைகள் சகஜமாக நடைபெறுகின்றன. சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திரு மணங்கள் அதிகமாக நடை பெறுவதன் மூலம் சாதியக் கட்ட மைப்பை, சாதிய இறுக்கத்தில் ஒரு தளர்வை ஏற்படுத்த முடியும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார்" என்று குறிப்பிட்டார். "ஆனால், சாதி மறுப்புத் திரு மணங்கள் செய்யும் தம்பதியருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது. அவர்களைத் தேடிப் பிடித்துப் படுகொலை செய்யக்கூடிய நிலையில்தான் தமிழ்நாடு உள்ளது" என்று வேதனை தெரிவித்தார்.  "தனிச் சட்டம்  இயற்றக் கோரிக்கை" "பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணமும், நீதியும், தண்ட னையும் வழங்கக்கூடிய நல்ல சட்டம்தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1981. இந்தச் சட்டங்கள் இருக்கும்போதுதான் தீண்டாமைக் கொடுமைகள், சாதி மோதல்கள், ஆணவக் கொலை கள் அனைத்தும் சகஜமாக நடக்கின்றன" என்று விளக்கினார். "இக்குற்றங்களில் ஈடுபடுப வர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை. போராடி வழக்குப் பதிவு செய்தாலும் காலதாமதம் செய்கிறார்கள். இதற்காக இவ்வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். ஆகவே வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க ஒரு தனிச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.