வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் புதுச்சேரியில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
புதுச்சேரி, அக்.30 - இந்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 ஜன நாயக விரோத நடவடிக்கை என்று மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் இராமச்சந்திரன் புதுச்சேரி முதன்மை தேர்தல் அதி காரி மற்றும் மாவட்ட தேர்தல் அதி காரியிடம் மாநிலக்குழு சார்பில் வழங்கிய கடிதத்தில், அரசியல் கட்சி கள் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் எந்தவிதமான முன் ஆலோசனையும் செய்யாமல், தேர்தல் ஆணையம் அதிகார அத்துமீறல்களுடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முனைவது, ஜனநாயக நெறிமுறைகளை அப்பட்ட மாக மீறும் செயலாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டத்தை அவமதித்தல் எஸ்ஐஆர் அமலாக்கம் குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதே சிக்கலான திருத்த முறையைத் திணிப்பது சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் சுருக்க முறைத் திருத்தம் போதுமானதாக இருக்கும் போது, சிரமமான SIR-ஐ கட்டாயப்படுத்துவது உள்நோக்கம் கொண்டது. விளிம்பு நிலை மக்கள் புறக்கணிப்பு ஆதாரை கட்டாயமாக்கி விட்டு, அதனைச் சரிபார்ப்புக்குக் மட்டும் ஏற்கமுடியாது என்பது வாக்குரிமையைப் பறிக்கும் அபாயம் உள்ளது. நிரந்தர வீடோ, வலுவான ஆவணங்களோ இல்லாத தலித், பழங்குடி மக்கள், நரிக்குறவர், வாடகை வீடுகளில் வசிக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் திட்டமிட்டுக் களையெடுக்கப்படுவார்கள் என்றும் இது சிறுபான்மை, தலித், பெண்கள் வாக்குரிமையைப் பறிக்கும் நோக்கம் கொண்டது என்றும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாரபட்சமான செயல்பாடு: எதிர்க்கட்சிகள் மற்றும் BJP பலவீனமாக உள்ள மாநிலங்களில் மட்டும் SIR நடைமுறை அமல்படுத்தப்படுகிறது, ஆனால் BJP ஆளும் அஸ்ஸாமுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது பாரபட்சமான செயல் என்றும், அதேபோன்று புதுச்சேரிக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நிர்வாகக் குழப்பம்: பருவமழை தீவிரமடையும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் களப்பணியை மேற்கொள்ள முடியாது; கால அவகாச நெருக்கடியால் தவறான தரவு உள்ளீடும், வாக்காளர்களின் பெயர்கள் தவறாக நீக்கப்படவோ வாய்ப்புள்ளது என்றும் கட்சி நிர்வாகச் சீர்குலைவைக் குறித்து எச்சரித்துள்ளது. சிபிஐ(எம்)-இன் நிலைப்பாடு தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை சிதைவதாகவும், குடியுரிமையை நிர்ணயிக்கும் பணி ECI-இன் அதிகார வரம்புக்குள் வராது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளது. புதுச்சேரியில் சிறப்புசீர் திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். வழமை யாக நடக்கும் திருத்தப் பணிகளை மட்டும் மேற்கொண்டு, வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை ஜன நாயகத்தை பாதுகாக்கும் வகையில் வெளிப்படைத் தன்மையோடு நேர்மை யாக நடத்திடுமாறு சிபிஐ(எம்) கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்ற அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
